என் வலைப்பூவை அடிக்கடி பார்ப்பவர்களில் சிலர்
தொடர்ந்து ஹைக்கூ கவிதைகள் எழுதுமாறு மின்னஞ்சல் மூலம் வேண்டுகோள் விடுத்தனர்.
யாரும் சிந்திக்காத கோணத்தில் நான் சிந்திப்பதாக பாராட்டுமழை வேறு பொழிந்தனர்.
அதற்குப்பிறகும் எழுதாமல் இருக்க முடியுமா?
போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர்
தூற்றட்டும் என்ற கண்ணதாசனின் பாடல் பொருளை ஒருமுறை நினைத்துப்பார்த்துவிட்டு எழுதிய கவிதைகளே பின் வருவன.
என் வலைப்பூவில்
வண்டுகளோடு இப்போது
வாண்டுகளும்.
தொலைபேசியால்
தொலைந்தது
கடிதம் எழுதும் பழக்கம்.
தொலைக்காட்சியால்
தொலைந்தது
படிக்கும் பழக்கம்
பாருக்குள்ளே நல்ல நாடு
‘குடி’ மக்கள்
பாடுகிறார்கள்
BARக்குள்ளே நல்ல
நாடு
இத் தலைமுறை குழந்தைகள்
தொலைத்தது பென்சிலை மட்டுமல்ல
தம் குழந்தைப் பருவத்தையும்.
கே.ஜி முதல் பி.ஜி வரை
வகுப்புகள் நடைபெறும் ஒரே இடம்
தனிப்பயிற்சி மையம்
யாருக்காக அந்தத்
தங்கப் பதக்கம்?
மேற்கு வானில் சூரியன்.
கடன்கொடுத்தவனைப்
பார்க்கப் பிடிக்காமல் நிலா...
அமாவாசை.
வானம் முழுவதும்
வண்ண மேகங்கள்
விற்காத பஞ்சு மிட்டாய்
பன்னிரண்டில் நாங்கள்
உலர்கிறோம்., நீ மலர்கிறாய்
மாணவரும் குறிஞ்சிப்பூவும்.
கவிழ்த்துப்போட்ட
வடைச்சட்டியாய்
வானம்.
வானத் தொலைக்காட்சியில்
ஒலியும் ஒளியும்
இடி மின்னல்.
உருக்கிய வெள்ளியை
ஊற்றியது யார்?
மலை அருவி.
வானத் தொலைக்காட்சியில்
வண்ண விளம்பரம்
வானவில்.
வருண பகவானின் கோலிக்குண்டுகள்
தரைமீது தவறி விழுந்தன
ஆலங்கட்டி மழை.
குவியாடியில்
உலகமே தெரிகிறது
புல்லின்மேல் பனித்துளி.
சோறு போடும் ஆறு- அதைக்
கூறு போடுவது யாரு?
மனிதன்.
விடிய விடிய
வெல்டிங் வேலையில் வருணன்
மின்னல்.
மலைமுகட்டில் மட்டும் வெயில்
வீடியோ எடுக்கிறானோ
இறைவன்.
குளத்து நீரில்
மிதக்கும் விளக்கு
நிலா.
பூமித்தாய்
நெருப்பைத் துப்புகிறாள்
எரிமலையாய்.
எந்தக் குழந்தை
பூமி கிலுகிலுப்பையை ஆட்டுவது?
நில நடுக்கம்.
ஒதாமல் ஒருநாளும்
இருக்க வேண்டா
பிளஸ் டூ மாணவன்.
கோழி போட்டால் பணம்
மாணவன் போட்டால் ரணம்
நாமக்கல்லில் முட்டை.
இளமையில் கல்
இல்லை இல்லை
இளமையில் நாமக்கல்
பள்ளி மாணவனும்
பண்ணைக்கோழியும் ஒன்றுதான்
நாமக்கல்லில்
குன்றின் மேல் இட்ட
வெண் துப்பட்டா
அருவி.
முதல்நாள் மிடுக்கு நடை
மறுநாள் கடைக்கு எடை
செய்தித்தாள்.
இளமையில் கல்
ReplyDeleteமுதுமையிலும் கல்...
உம் ஹைக்கூ மாலை கலக்கல்.
Arumaiii 👏 👏
Delete