Tuesday, 3 November 2015

துவரம்பருப்பு ஹைக்கூ


அப்பப்பா....ஹைக்கூ கவிதை எழுதி எத்தனை மாதங்களாயிற்று! இப்போது துவரம்பருப்பு விலை உயர்வு என்னை எழுதத் தூண்டியது. கவிஞனுக்கு எதுவும் பாடு பொருள் ஆகுமே!

இப்போது புரிகிறதா
யார் பெரியவன் என்று
கேட்டது துவரம்பருப்பு.

மாப்பிள்ளை வருகிறாரே
என்ன ஸ்பெஷல்
துவரம்பருப்பு சாம்பார்!

கிராம் கணக்கில் வாங்குவது
தங்கம்.  இன்னொன்று?
து.பருப்பு

அப்பா: சொல்லுடா ...து.பருப்பு
பையன்: டு பருப்பு
அம்மா: சரியாத்தான் சொல்றான்

அம்மா விழி பிதுங்கினாள்
குழந்தை அடம் பிடித்தது
பருப்பு சாதம் கேட்டு. 


கணவன் மனைவி சண்டை
நீ ஒரு துப்பு கெட்ட ஆம்பிளே
நகை உண்டா நல்ல து.பருப்பு உண்டா!

நீண்ட யோசனைக்குப் பின்
மனைவி சொன்னாள்:
2020 இல் இந்தியா துவரஞ்செடி வளர்ந்த நாடாக வேண்டும்.

வாக்கு வாதம் முற்றியது
நீ என்ன பிஸ்தாவா
நீ என்ன துவரம் பருப்பா?

வங்கி மேலாளர்
கண்டித்துச் சொல்லிவிட்டார்
லாக்கரில் து.பருப்பை வைக்கக் கூடாது.

கல்லூரி விடுதியில் கலாட்டா
என்ன பிரச்சனை  --முதல்வர்
துவரம் பருப்பு சாம்பார் வேண்டும்.

எதிர்க் கட்சித் தலைவர் முழங்கினார்
ஆட்சி மாற்றம் உறுதி

துவரம்பருப்பு வாழ்க.

2 comments: