Monday, 6 May 2024

கோடை ஹைக்கூ

 சூர்யா எப்போதாவது நூறு

சூரியன் எப்போதும் நூறு

சரியான போட்டி!

 

தொட்ட அளவில் ஊறும்

மணற்கேணி

திருக்குறளில் மட்டும்.

 

ஏரி குளங்கள்

மிகவும் அருமை

கிரிக்கெட் விளையாட!

 

தானத்தில் சிறந்தது

அன்னதானம் அன்று

தண்ணீர் தானம்!

 

வீட்டு அழைப்புமணி ஒலித்தது

குடிநீர் கேட்டு நின்றது

குருவி.

 

என் வீட்டுக்காரர் சம்பளம்

பாதி குடிப்பதற்கே

மினரல் வாட்டர்.

 

நண்பகல் நேரத்தில்

நடந்து செல்லாதீர்

எமன் எதிரில் வரும் நேரம்!

 

-கவிஞர் இனியன், கரூர்

2 comments: