அமெரிக்காவில் டெல்லாஸ் பகுதியில் ஓர் இந்து கோயில் உள்ளது. அது நம்மூர் கோயிலைப் போல் இல்லை. ஒரு திருமண மண்டபம் போல் காட்சி அளிக்கிறது.
முழுக்க முழுக்க
பொதுமக்களின் நன்கொடையில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது என்பது பெரும் வியப்பை அளிக்கிறது. நன்கொடையாளர்களின்
பெயர்களைப் பொன்னெழுத்துகளால் பொறித்து வைத்திருக்கிறார்கள்.
அந்தக் கோவில்
மண்டபத்தில் ஐந்நூறு பேர் உட்காரலாம் அந்த மண்டபத்தில் பல்வேறு
தெய்வங்கள் சிலை வடிவில் உள்ளன.
அவற்றுள் முதன்மைத் தெய்வங்களாகச் சிவனும் விஷ்ணுவும் மகாலட்சுமியும்
உள்ளன.
அர்ச்சகர்
சிலர் மாத ஊதியத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பன்மொழி
வித்தகராக உள்ளனர். தமிழ், சமஸ்கிருதம், இந்தி முதலிய மொழிகளில் அர்ச்சனை செய்கிறார்கள்.
இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவான கோவில் இது என்பதால் பல மொழிகளுக்குச்
சொந்தக்காரர்களாக இருக்கக்கூடிய மக்கள் அங்கு நாள் தோறும் கூடுகின்றனர்.
ஒவ்வொரு தெய்வத்திற்கும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. அனைவரும் அமர்ந்து, பக்தி
பாடல்களைச் சேர்ந்து பாடுவது கண்கொள்ளாக் காட்சியாக
உள்ளது.
அபிஷேகம்,
ஆராதனை எல்லாம் முடிந்தவுடன்
அர்ச்சகர் , ஒரு
காகித உறையை அங்கே
வரிசையாக அமர்ந்துள்ள பக்தர்களில் முதலாமவருக்குக் கொடுக்கிறார். அதிலே அவர் ஒரு டாலரோ இரண்டு டாலரோ வைக்கிறார். இப்படியே அடுத்தடுத்து அந்த உறை கை மாறுகிறது. அவரவர் விரும்பிய வகையில் அந்த உறைக்குள்
பணத்தை வைக்கிறார்கள். வரிசையில் கடைசியாக இருக்கும் பக்தர் அந்த உறையை அர்ச்சகரிடம் கொடுத்து விடுகிறார். காணிக்கை பெறுவதில் இது ஒரு புதிய நடைமுறையாகக் காணப்படுகிறது!
இந்தக் கோயிலில்
பல்வேறு நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளன. குழந்தைகளின்
நாட்டிய நிகழ்ச்சி,
சேர்ந்திசைப் பாடல்
பயிற்சி முதலியன இங்கே நடைபெறுகின்றன. இந்தியாவில்
இருந்து அவ்வப்போது வருகை தரும் ஆன்மிகப் பெரியார்களின் சொற்பொழிவுகளும் நடைபெறுகின்றன. இந்திய மொழிகளில் குழந்தைகள் பயிற்சி பெற
விரும்பினால் அதற்கான வசதியும் இந்த கோயிலில் உள்ளது. குறிப்பாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்து குழந்தைகளுக்கான
பண்பாட்டு, கலாச்சார வகுப்புகள் நடைபெறுகின்றன, சுருங்கச்
சொன்னால் இந்தக் கோயிலை ஒரு சமுதாய மையம் என்று சொல்லலாம்.
இந்தக்
கோயிலில் கழிப்பறை வசதி உள்ளேயே உள்ளது. மிகவும்
தூய்மையாக பராமரிக்கப்படுகிறது.
பக்தர்கள்
தம் மிதியடிகளை விடுவதற்கு தனி இடம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரே
சமயத்தில் நூறு கார்களை நிறுத்தும் அளவிற்கு இட வசதி உள்ளது.
இந்தக்
கோவில் காலை ஒன்பது மணிக்குத்தான் திறக்கப்படுகிறது. இரவு எட்டு மணி வரை திறந்திருக்கும்.
தெய்வச் சிலைகளைத்
துடைப்பது, பூசனைக்கு
உரிய ஏற்பாடுகளைச் செய்வது, கோவிலுக்கு
வரும் பக்தர்களை வரவேற்று அமரச் செய்வது, அவர்களுக்கு
பிரசாதம் விநியோகிப்பது என அனைத்துப் பணிகளையும் பக்தர்கள் தாமே முன்வந்து நாள் முழுவதும்
மகிழ்ச்சியோடு செய்கின்றனர். குறிப்பாக
முதியவர்கள் இத்தகைய பணிகளை மனமுவந்து செய்கின்றனர். இந்தப் பணிகளுக்கு எந்த ஊதியத்தையும் அவர்கள்
எதிர்பார்ப்பதில்லை.
இந்தக்
கோவிலை ஒரு நிருவாகக் குழு திறம்பட நடத்துகிறது. கோயில் நிருவாகத்தில் அரசு தலையீடு எதுவும்
இல்லை.
கோவில் கட்டடத்தின் உறுதித் தன்மை, தீத்தடுப்பு ஏற்பாடு, பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் ஆகியவை சரியாக உள்ளனவா என்பதை மட்டும் அரசு கண்காணிக்கிறது.
முனைவர் அ.கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து.
நான் பிளானோவில்தான் இருக்கிறேன்
ReplyDeleteஇது ஹனுமார் கோவில் . எதை தொட்டாலும் பணம்தான் . கார் பூஜைக்கு பணம் . பால் காய்ச்சினால் பணம் . பூஜாரிகள் கொழித்து குண்டாக இருக்கிறார்கள் . கோயில் சுத்தமான வியாபாரம்தான்
Good narrative description about DFW Hindu temple at Irwing.. This is the First temple built in this city.
ReplyDeleteNow Indian population is huge. There are new temples have come up. Hanuman temple, Guruvayurappan temple, Murugan temple gave come up