(9.11.16 அன்று
500, 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என நடுவண் அரசு அறிவித்ததை ஒட்டி எழுதப்
பெற்றது)
பிச்சை
ஐந்நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தால் நாசமா போச்சு என்றான்
நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்ததும் வாழ்க என்றான்
விவரம் தெரிந்த பிச்சைக்காரன்!
கடன்
வாராக் கடன் என நினைத்தேன்
இன்று வீடு தேடி வந்து கொடுத்தார்
எல்லாம் ஆயிரம் ரூபாய் நோட்டுகள்!
நேற்றுவரை கொடுத்தக் கடனைக் கேட்டு நச்சரித்தார்
இன்று பணத்துடன் சென்றேன்
அவசரமில்லை; ஏப்ரலுக்குப் பிறகு
கொடுங்கள் என்றார்!
பள்ளிக்
கட்டணம்
ஃபீஸ் கட்ட ஆயிரம் சாக்குப் போக்கு சொல்லும் அப்பா
ஆயிரம் ரூபாய் கட்டுடன் பள்ளிக்கு ஓடினார்
மகளுக்கு ஒன்றும் புரியவில்லை!
சிறுவாடு
ஐந்நூறு ஆயிரம் என
ஐந்தாயிரம்
சிறுவாட்டுப் பணத்தைக் கொடுத்தாள்
மனைவி
மோடி வாழ்க.
மொய்
ஐந்நூறு ஆயிரம் ரூபாய் நோட்டுகளாய்
வந்து குவிந்தன
திருமணத்தில் மொய்ப்பணமாக!
நோட்டு
ஒரு ரஃப் நோட்டு வாங்கித் தராத
அப்பா
ஆயிரம் ரூபாய் நோட்டுகளைத் தந்தார்
மகன் வாங்கி காந்திக்கு மீசை
வரைந்தான்!
புலம்பல்
ஆயிரம் இருந்து என்ன பயன்
ஒரு டீ குடிக்க வழியில்லையே
புலம்ப வைத்தவர் மோடி!
பயன்
இந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகளை என்ன
செய்வது?
“என்னிடம் கொடுங்கள்” தொடர்ந்து
சொன்னாள் மனைவி
“பால் கணக்கு எழுதப் பயன்படும்!”
பணக்கார ஏழை
நூறு ரூபாய் இருந்தாலே பணக்காரன்
ஆயிரம் ரூபாய் நோட்டு இருந்தாலும்
ஏழைதான்
இன்று மட்டும்.
அவர் இனி யாரோ
அந்த பெரிய கருப்புப் பண
அரசியல்வாதி
நேற்று வரை ஹீரோ
இன்று அவர் ஜீரோ!
புண்ணியம்
வானொலியில் சொல்லல் வெளிநாடு செல்லல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஐந்நூறு ஆயிரம் செல்லாதென
அறிவித்தல்!
அனைத்தும் அருமை ஐயா... ரசித்தேன்...
ReplyDeleteஅருமை
ReplyDeleteஅருமை ஐயா
As usual every piece is a master piece.
ReplyDeleteகாந்திக்கு மீசை வரைந்ததை அதிகமாகவே ரசித்தேன்.
ReplyDeleteஆயிரம் இருந்தும் என்னபயன்? இன்று ஒரு டீக்கு வழி இல்லையே! மிக நன்று. நீதிபதி மூ.புகழேந்தி
ReplyDeleteஹைக்கூ ..ஹா ஹா..ஹைகிளாஸ் சார்.
ReplyDeleteமதிப்புக் கூட்டப்பட்ட தாளின் மதிப்பினைச் செல்லாது என மோடி அறிவித்த போது தான் அது வெற்றுத்தாள் என அனைவரும் அறிந்தனர். செல்வம் = செல்லும் + வரும். இப்ப செல்லாது, பிறகு செல்லும் தாள் வரும். 500, 1000 ரூபாய் தாள்கள் அறிவிப்பு வந்தவுடன் வேண்டா வெறுப்பாகப் பார்க்கத் தோன்றியது. புதிய 2000 ரூபாய் தாள் வந்ததும் அதற்கு மதிப்பு இருந்ததே தவிர மாற்ற வழியில்லை. மாற்றம் மனிதனைச் சில மணி நேரம், சில நாட்கள் பிச்சைக்காரனைப் போல் மாற்றிவிட்டது. ஆனாலும், இரணச்சிகிட்சை சமுதாயத்தை செம்மையாக்கினால் நல்லது தான். தங்களது ஹைக்கூ கவிதை அருமை.
ReplyDeleteபேராசிரியர் ரா.லட்சுமணசிங்