அண்மையில் ஒரு மாமனிதரைச்
சந்தித்தேன். அவர் பேசும்போது திருக்குறள் மணம் வீசியது. குறட்பாக்களுக்கு அவர்
எளிய ஆங்கிலத்தில் தந்த அழகான விளக்கம்
செவிநுகர் கனியென இனித்தது.
பள்ளி ஆசிரியராகப் பணியைத்
தொடங்கிப் பாராளுமன்ற உறுப்பினராக உயர்ந்தார். தொடர்ந்து நான்கு முறை பாராளுமன்ற
உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கபட்டார். பதின்மூன்று ஆண்டுகள் கலை,கலாச்சார, கல்வி,
அறிவியல் அமைச்சராகத் திறம்படப்
பணியாற்றினார். “கல்விக்கான பத்தாண்டு பெருந்திட்டம்” என்பது அவருடைய
மூளைக்குழந்தை ஆகும். இத் திட்டம் பெற்ற பெருவெற்றி காரணமாக உலகமே இவரைத்
திரும்பிப் பார்த்தது. அது யுனெஸ்கோ நிறுவனத்தின் கவனத்தை ஈர்த்தது.
யுனெஸ்கோவின் இடைநிலை மற்றும்
தொழிற்கல்வி மேம்பாட்டுத் துறைக்கான இயக்குநராகத் தேர்ந்தெடுக்கபட்டார். பாரிஸ்
நகரில் யுனெஸ்கோ செயலகத்தில் பணியாற்றிய அவர், புதுதில்லி அலுவலகத்திலும்
பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. இயக்குநராகவும், இந்தியா, பூட்டான், ஸ்ரீலங்கா,
மாளத்தீவு நாடுகளின் பிரதிநிதியாகவும் செயலாற்றினார்.
யுனெஸ்கோ பணிநிறைவுக்குப்பின்,
குளோபல் ரெய்ன்போ ஃபௌண்டேஷன், கணிதமேதை ஸ்ரீநிவாச இராமானுஜம் அறக்கட்டளை ஆகியவற்றை
நிறுவி நிர்வகித்து வருகிறார். எண்ணற்ற சமூக அமைப்புகளுடன் தன்னை இணைத்துக்கொண்டு,
சமுதாய மேம்பாட்டுக்காகச் சலிப்பின்றி உழைக்கிறார்.
பேச ஒரு வாய்ப்பு |
august presence |
வாழ்த்தொப்பம் இடுகிறார் |
குறள் மணக்கும் பேச்சு |
அந்த மாமனிதர் மொரிஷியஸ் நாட்டின்
அப்துல் கலாம் என அழைக்கப்படும் திரு. ஆறுமுகம் பரசுராமன் அவர்கள். மொரீஷியஸ்
நாட்டைச் சேர்ந்தவர். இவரது அன்பான அழைப்பினை ஏற்று ‘வள்ளுவர் சீர்பரவுவார்’ திரு.க.செங்குட்டுவன்
இப்போது மொரீஷியஸ் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அந் நாட்டின் தேசிய
விழாவான தமிழ்ப்புத்தாண்டு விழாவில் இருவரும் இணைந்து பங்கேற்கின்றனர்.
அவர்களுக்கும் மொரிஷியஸ் நாட்டு
மக்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ஐயா அவர் ஒரு மாமனிதர். ஒரு மனிதன் உயர்நிலையை அடையும் போது எவ்வளவு அன்பும் பணிவும் கொண்டிருக்கவேண்டும் என்பதன் உதாரணம் அவர். தனது வாழ்வு கீற்றுக்கொட்டகையில் தொடங்கியது என்பதை வெளிப்படையாக பேசினார். அவரை நாம் அப்துல்கலாமுடன் இணைத்து பேச முழுத்தகுதி கொண்டவர். அவருக்கு நமது கல்லூரியைப்பற்றி ஆங்கிலத்தில் எடுத்துரைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.எனது பேச்சை மிகவும் பாராட்டிய பெருந்தகை. அவருடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்திய கல்லூரித் தலைவருக்கு நன்றி.
ReplyDeleteமாமனிதருக்கு அன்பான நல்வாழ்த்துகள்...
ReplyDeleteமொரிஷியஸ் நாட்டின் அப்துல் கலாம் அவர்களைப்போற்றுவோம்
ReplyDeleteநல்ல மனிதர்கள் நல்ல சாதனையாளர்கள். அவர்கள் எங்கும் ஒளிர்வர். - நீதிபதி மூ.புகழேந்தி
ReplyDeleteThank you for the write up about this great man.
ReplyDeleteஅப்துல் கலாம் காலத்தை வென்றவர். நாடு என்ன செய்தது நமக்கு என்று எண்ணுபவர்கள் மத்தியில் நாட்டிற்காக
ReplyDeleteசேவை செய்தவர். தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாத பெருந்தகை. அவர் பேராசிரியர், விஞ்ஞானி என்ற பதவிகளைக் கடந்து இன்றளவும் மக்கள் ஜனாதிபதியாக நிலைத்து நிற்பதற்கு அவரது செயல்பாடுகளே காரணம். அதைப்போன்று மொரிஷியஸ் நாட்டின் அப்துல் கலாம் என அழைக்கப்படும் திரு. ஆறுமுகம் பரசுராமன் அவர்கள் கல்விக்கான பத்தாண்டு பெருந்திட்டத்தை உருவாக்கித்தந்துள்ளார் என நினைக்கும்போது அவரது தொண்டுள்ளம் எப்படிப்பட்டது என உணர்வுப் பூர்வமாக அறியமுடிகிறது. அவரது சாதனைகள் மேலோங்க வேண்டும். வாழ்த்துக்கள்.
பேராசிரியர் முனைவர் ரா.லட்சுமணசிங்
கரூர்.