இன்று(7.4.17) உலக சுகாதார நாள். உலக சுகாதார
நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும் இந் நாளைக் குறிக்கும் வகையில் ஒரு கோட்பாட்டு வாசகத்தை
அறிவிக்கும். மன அழுத்தத்தைப் பற்றிப் பேசுவோம்
என்பதுதான் இவ்வாண்டின் இந் நாளுக்கான வாசகம். எனவே வலைப்பூவில் இதுகுறித்துப் பேசிவிடுவது
என எண்ணியதன் விளைவுதான் இப் பதிவு.
இந்தியர்கள் பத்துப்பேரை வரிசையாக நிறுத்தி,
“உண்மையைச் சொல்லுங்கள். உங்களில் எத்தனைப் பேர் மன அழுத்தத்தால்
அவதிப்படுகிறீர்கள்?” என்று கேட்டால் எட்டுப் பேர் கை தூக்குவார்களாம். அமெரிக்கா
போன்ற வளர்ந்த நாடுகளிலும் இதே இலட்சணம்தான்.
என் மனைவி இருக்கிறாளே அவள் எனக்குப்
பார்க்கப்பட்ட வெள்ளிவிழாப் பெண் அதாவது இருபத்தைந்தாவது பெண். எனது
இருபத்தைந்தாவது வயதில் தொடங்கிய பெண் பார்க்கும் படலம் முப்பத்து நான்காம்
வயதில்தான் முடிவுக்கு வந்தது. ஒரு கட்டத்தில் காமராசரைப்போல வாழவும் மனத்தைத்
தயார்ப்படுத்தினேன். பெண் அமையவில்லையே என்று நான் கவலைப்பட்டதில்லை. பட்டிமன்றம்,
கவியரங்கம் எனக் கலக்கிக்கொண்டுதான் இருந்தேன். ஆனாலும் முயற்சியைக் கைவிடவில்லை.
கடைசியில் எனக்கென ஒருத்தி சிக்கிக் கொண்டாளே!
ஊடலும் கூடலும் நிறைந்ததுதானே வாழ்க்கை?
எங்கள் ஊடல் குழம்பில் போடப்படும் உப்பின் அளவுதான்..தாமு ஒரு விளம்பரப் படத்தில்
சொல்வதுபோல் உப்பு கூடவும் கூடாது குறையவும் கூடாது சில சமயம் சண்டைப் போட்டுக்கொண்டு படுக்கச்
செல்வோம். ஆனால் அடுத்த நள் காலையில் அதையெல்லாம் இருவரும் மறந்துவிடுவோம். இன்று
புதிதாய்ப் பிறந்தோம் என்னும் உற்சாகத்தோடு இந்த நாள் இனிய நாள் என்று, சுவையான
தேநீருடன் தொடங்குவோம்.
மன அழுத்தமாவது மண்ணாங்கட்டியாவது!.
ஒரு நாள் அவளை
அலைப்பேசியில் அழைத்து, “நம் காரிலிருந்து ப்ரீஃப் கேஸ் திருடு போய்விட்டது.
அதிலிருந்த உனது பாஸ்போர்ட்டும் தொலைந்து விட்டது” என்றேன். “சரி சரி வீட்டுக்கு
வாங்க, பார்த்துக் கொள்ளலாம்” என்றாள்.
பெரிதாக வருத்தப்படாமல் சில மாதங்களில் புதிய பாஸ்போர்ட்டைப் பேற்றோம். சில சமயம்
நடப்பது நடந்தே தீரும். அதற்காக மூலையில் சென்று முடங்கிப்போய்விடக் கூடாது.
சுதாரித்துக்கொண்டு அடுத்த அடியை எடுத்துவைக்க வேண்டும்.
நாங்கள் இருவரும் நகைச் சுவை உணர்வு
மிகுந்தவர்கள். சிறிய ஜோக் என்றாலும் பெரிதாக விழுந்து விழுந்து சிரிப்போம்.
அப்புறம் எங்கிருந்து வரும் மன அழுத்தம்?.
வள்ளுவர் சொல்வதுபோல் இடும்பை அதாவது
துன்பத்தை இயல்பு எனக்கருதப் பழகிவிட்டால் பிறகு கவலை ஏது? கலக்கம் ஏது?
“‘வெயில் கொளுத்துகிறதே ஒரு ஏ.சி வாங்கலாமா?”
என்றேன். “ஒரு இரண்டு மாதத்துக்கு உடம்பில் உள்ள வேர்வைதான் வெளியில் வரட்டுமே”-
இப்படிச் சொன்னது என் மனைவி.
பிறகு எங்கிருந்து வரும் மன அழுத்தம்?
Wonderfully said sir.. Laughter is the best therapy for stress.. and knowing to laugh is a boon.. I have seen many sitting simply without laughing any jokes.. First let us know to laugh and keep our mind light.. thanks for the thought for today..
ReplyDeleteவாழ்வியல் யதாத்த்தத்தை உணர்ந்துவிட்டால் மன அழுத்தத்திற்கு வழியேது
ReplyDeleteஅருமை ஐயா
ஏ.சி.வாங்கவேண்டும் என்ற ஆர்வத்திற்கு சரியான மறுமொழி கிடைத்தது. உண்மைதான்.
ReplyDeleteநல்ல மருந்து.- நீதிபதி மூ.புகழேந்தி
ReplyDeleteநல்ல மருந்து.- நீதிபதி மூ.புகழேந்தி
ReplyDelete