Saturday, 22 July 2017

பந்து உங்கள் ஆடுகளத்தில்!


இப்படித்தான் திடீர் திடீரென்று எனக்கு ஹைக்கூ பைத்தியம் பிடித்துவிடும். எடு மடிக்கணினியை; தொடு எழுத்துகளை; இடு பதிவை என ஆரம்பித்து விடுவேன். இல்லை இல்லை ஆரம்பித்து விடமாட்டேன்; விடவே மாட்டேன்.
இப்போது எனது ஹைக்கூ பந்து உங்கள் ஆடுகளத்தில்.


புறம் தள்ள விரும்பு
பொதுப்பகையை
பிளாஸ்டிக்

விரும்பிப் புறம் தள்ளு
புதுப் பகையை
சிகரெட்

நில்
சொல்வதைச் செய்யற்க
பாவம் என.

என்றும்
செய்வதைச் சொல்லற்க
உதவி என.

விடாமல் முயன்று
விட்டதைப் பிடி
வெற்றி 


குன்றென நிமிர்ந்து
கொண்டதை விடு
சோம்பல்

கோடி நன்மை
கோபத்தில் மூடு
வாயை

கோடி தீமை
தவிக்க விட்டால்
தாயை

அடிமேல் அடி
அம்மியை அல்ல
அகந்தையை

இடிமேல் இடி
இமயமும் இடியும்
நம்பிக்கையுடன்

கவிஞர் இனியன், கனடா.


6 comments:

  1. அனைத்தும் அருமை ஐயா...

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  2. ஆஹா... அனைத்துமே அருமை. மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  3. உங்களின் "ஹைக்கூ"
    எமக்கு உவப்பு!

    ReplyDelete
  4. சுருக்கமாக, அருமையாக. நன்றி.

    ReplyDelete
  5. அழகான கவிதை. பொதுப்பகை பிளாஷ்டிக், புதுப்பகை சிகரெட் நல்ல சிந்தனை.
    முனைவர் ரா.லட்சுமணசிங்

    ReplyDelete