Monday, 24 July 2017

உடல் நலத்திற்கான மந்திரக் கோல்

    டாக்டர் வைத்தீஷ் அகர்வால். புது தில்லி சப்தர்ஜங் மருத்துவமனையின் மூத்த மருத்துவர். ஆங்கில நாளேடுகளில் எழுதி வருபவர். நல்ல மனநல ஆலோசகரும் கூட.

   எனது தமிழ்ப்பூ வலைப்பக்கத்திற்கான நேர்காணல்.

குட் ஈவ்னிங் டாக்டர். திஸீஸ்  டாக்டர் கோவிந்தராஜூ ஃபிரம் டமில் நாடு.

“வணக்கம். நான் பத்தாண்டுகள் சென்னை அப்பல்லோவில் பணி செய்தபோது தமிழ்ப் பேசக் கற்றுக் கொண்டேன். நாம் தமிழில் பேசலாமே”.

“மகிழ்ச்சி. டென்ஷன்  அதாவது மனத்தில் ஏற்படும் பதற்றம் என்றால்..........
நம்முடைய எதிர்பார்ப்புக்கும் நிகழ்வுக்கும் உள்ள இடைவெளிதான் டென்ஷன் என்பது, ஸ்ட்ரெஸ் என்பது

கொஞ்சம் புரியும்படி......

சொல்கிறேன். ஒரு பேருந்து நிறுத்தத்தில் உங்களுக்கான  பேருந்து உடனே வரவேண்டும் என எதிர்பார்ப்புடன் நிற்கிறீர்கள்.  பேருந்து உடனே வந்தால் நோ டென்ஷன். தாமதம் ஆக ஆக நிலை கொள்ளாமல் தவிக்கிறீர் பாருங்கள் அதுதான் டென்ஷன். சரியாகப் படிக்காமல்  தேர்வை எதிர்கொள்ளும் உங்கள் மகன் படும்பாடுதான் ஸ்ட்ரெஸ்

டென்ஷனைத் தவிர்க்க முடியுமா?

நம் வாழ்க்கையுடன் ஒட்டிப்பிறந்தது டென்ஷன். முதல் வகை: ஒரு டேக் இட் ஈஸி ஆளாக இருந்தால் பிரச்சனை இல்லை. இரண்டாவது வகை: எனக்கு மட்டும் ஏன் இப்படி?’ என்று புலம்பும் ஆளாக இருந்தால் பிரச்சனைதான்”.

டாக்டர்  இரண்டாம் வகை ஆள்கள் மகிழ்ச்சியாக வாழ என்ன செய்ய வேண்டும்?

டென்ஷன் குறைவாக இருந்தால் உடல்நலம் நிறைவாக இருக்கும். உடல் நலம் நன்றாக இருந்தால் மகிழ்ச்சி தானாக வரும்.

சரி. அதற்கு என்னென்ன வழிமுறைகள் இருக்கின்றன?

எப்போதும் நல்லதே நடக்கும் என நேர்மறையாகச் சிந்தியுங்கள். காலையில் எழுந்ததும் இன்றைய நாள் எனக்கு நல்ல நாள் என வாய்விட்டுச் சொல்லுங்கள். உங்கள் மகள் எனக்கு நிச்சயம் வேலை கிடைக்கும்என்று மூன்று முறை உரக்கச் சொல்லிவிட்டு உற்சாகமாக நேர்காணலுக்குச் செல்லட்டும்.

    உங்கள் மகன் ஆகாயக் கோட்டை கட்டக்கூடாது. படிப்புக்கேற்றது திறமைக்கேற்றது எதுவோ அதனை நோக்கமாகக் கொள்ள வேண்டும். நடைமுறையில் சாத்தியமாகக் கூடிய நோக்கமாக இருக்க வேண்டும். இதை ஆங்கிலத்தில் ரியலிஸ்டிக் கோல்ஸ் என்பார்கள்.

    அந்தநோக்கத்தை அடைவதற்காக படிப்படியாகத் திட்டமிட்டு உழைக்க வேண்டும். நடுவில் சில தடைக்கற்களும் தட்டுப்படும் என்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் ஸ்ட்ரெஸ் இருக்காது.

    நோக்கத்தை நோக்கிப் பயணிக்கும்போது பல பணிகள் குறுக்கிடும். எவற்றை முதலில் செய்ய வேண்டும் எவற்றை அடுத்தடுத்துச் செய்ய வேண்டும் என்று வகைப்படுத்தி எழுதிவைத்துக்கொண்டு செயல்படுங்கள். சிலர் செய்யச்சொல்லும் வேலைகளை என்னால் முடியாதுஎனப் பணிவாகச் சொல்லிவிடுங்கள். எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டால் எந்த ஒரு வேலையையும் முழுமையாகச் செய்து முடிக்க முடியாது.

    மதில் மேல் பூனையாக இருக்காதீர்கள். நோக்கத்தில் அதை அடைவதற்கான வழிமுறைகளில் தெளிவாக இருங்கள். உங்கள் பாரதியார் கூட தெளிவு பெற்ற  மதியினாய் வா வா வாஎன்றுதானே பாடுகிறார்?

    முக்கியமான ஒன்று. நீங்கள் சினம் கொள்ளும் சூழ்நிலையும் உருவாகலாம். உரிய முறையில் அதைக் கவனமாக வெளிப்படுத்துவதில் தவறில்லை. அல்லது  கொஞ்சம் மவுனம் காத்து மெதுவாக  ஒன்று இரண்டு மூன்று என இருபதுவரை எண்ணுங்கள். அப்படியே கோபத்துக்குக் காரணமானவரை மன்னித்து விடுங்கள். இந்த மன்னித்தல் கலை இரத்த அழுத்தம் உயராமல் பார்த்துக் கொள்ளும்.

   “நன்றி டாக்டர்

   “போய் வாருங்கள். வாழ்த்துகள்.
..............................................................................................................................................................
குறிப்பு: இந்தப் பதிவு 25.12.2016 அன்று தி இந்து ஆங்கில நாளேட்டில் வெளியான டாக்டர் வைத்தீஷ் அகர்வால் அவர்களின் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.

Dr.A.Govindaraju, from Canada.

   



9 comments:

  1. //கோபத்துக்குக் காரணமானவரை மன்னித்து விடுங்கள். இந்த மன்னித்தல் கலை இரத்த அழுத்தம் உயராமல் பார்த்துக் கொள்ளும்//

    இதுதான் ஐயா தேடுதலின் முடிவு அருமையாக உரையாடல் வழியே சொல்லிச் சென்ற விதம் அழகு உங்களை எல்லாம் நான் வாழ்த்தவோ, பாராட்டவோ இயலாது ஆகவே பகிர்வுக்கு நன்றி.

    தங்களது தளத்தில் ஃபாலோவர் கெஜட் வைத்தால் இணைந்து கொள்ள வசதியாக இருக்கும் ஐயா - கில்லர்ஜி

    ReplyDelete
  2. அருமையான உரையாடல்.
    நானும் நடைப்படுத்த முயற்சிக்கிறேன்.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  3. அருமையான கட்டுரை, பதிவும். அதுவும் இறுதியில் சொல்லப்பட்டது....மன்னித்தல்....ஆம் அது மிக மிக உயர்ந்த ஒன்று....

    மகாபாரதத்தில் தர்மர் சொல்லுவது...க்ஷமா ஹி சத்ய ஹை.

    துளசி, கீதா

    ReplyDelete
  4. We adopt 90% what is said in the conversation.Your publishing will help many people to adopt.

    ReplyDelete
  5. நல்லதொரு பகிர்வு. நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.

    ReplyDelete
  6. மன அழுத்தம் தான் பெரும்பாலான உடல்நலக் குறைபாடுகளுக்கு காரணம். நல்ல பதிவு. நன்றி!

    ReplyDelete
  7. உடல்நலத்தைப் பேணுதல் குறித்த நல்ல கட்டுரை. மனதளவில் ஏற்படும் பிரட்சனைகளே உள்ள நோய்களையும் , உடல் நோய்களையும் உருவாக்கக் காரணமாகிறது. ”ஆத்திரம் அறிவுக்குச் சத்துரு”, முட்டாளுக்குப் புத்தி மட்டு என்பதெல்லாம் மனபாதிப்பிலிருந்து விடுபட்டு வாழ முன்னோர்கள் வகுத்த பழமொழிகள். டென்ஷன், டிப்ரசன் இரண்டையும் தவிர்த்தால் உள்ள நோயைத்தவிக்கலாம், உடல் நோயை வெல்லலாம். வாழ்க! வளர்க! வெல்க!
    முனைவர் ரா.லட்சுமணசிங்
    பேராசிரியர்
    அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி)
    கரூர் - 5

    ReplyDelete