Thursday 9 August 2018

கேட்டாரே ஒரு கேள்வி

    உயர்நீதி, உச்ச நீதி மன்றங்களிடத்தில் எனக்கு எப்போதும் தனி மதிப்புண்டு. மறைந்த கலைஞரின் உடல் அடக்கம் செய்வது தொடர்பான சிக்கலில் தமிழகம் போர்க்களமாக மாறாமல் தடுத்த பெருமையை சென்னை உயர்நீதி மன்றம் தக்கவைத்துக் கொண்டதை நாமறிவோம்.

    ஆனால் சிற்சில சமயங்களில் நீதியரசர்களின் கருத்துகளும் தீர்ப்புகளும் கடும் விவாதத்திற்கு உள்ளாகின்றன. அவர்கள் தெரிவிக்கும் சில கருத்துகள் மக்களின் மதநம்பிக்கை, புனிதமான உணர்வுகள் முதலியவற்றைக் காயப்படுத்துகின்றன என்பது உண்மையே.

   இன்றைய தினமணியில் வந்த ஒரு செய்தியைப் படித்து அதிர்ந்து போனேன். உச்சநீதி மன்ற நீதியரசர் ஒருவர் நாகாக்க தவறிவிட்டார் என்பதுதான் அச் செய்தியின் சாரம்.

   திருமணமான பெண்ணொருத்தி திருமணத்திற்குப் புறம்பான உறவு வைத்துக் கொண்டது தொடர்பான வழக்கு அது. இத் தகாத உறவு குறித்து வழக்குரைஞர் வைத்த வாதமும் அதற்கு நீதியரசர் தன் திருவாய் மலர்ந்ததும் பின்வருமாறு.

வழக்குரைஞர்: “நம் நாட்டில் குடும்பம் என்பது ஒரு புனிதம் மிகுந்த
               நிறுவனமாகக் கருதப்படுகிறது.”

நீதியரசர்      : “அதில் அப்படி என்ன புனிதம் இருக்கிறது?
   
வழக்குரைஞர்:  “ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம் நாட்டின் பண்பாடு.
                திருமண உறவில் மூன்றாவது நபருக்கு இடமில்லை.
                வெளி நாட்டில் இது ஏற்புடையதாக இருக்கலாம். நம்
                நாட்டுக்குப் பொருந்தாது.”

நீதியரசர்:       “கணவனின் அனுமதியுடன் ஒரு பெண் வேறு                            ஒருவருடன்                உறவு வைத்துக்                            கொள்வதைத் தவறு என்று சொல்ல                                    முடியாது.”

     தொடர்ந்து, நீதியரசர் வழக்கை வேறு தேதிக்கு ஒத்தி வைக்கிறார்.

   இங்கே  நீதியசர் குறிப்பிட்ட இரு கருத்துகளும் எனக்கு ஏற்புடையன அல்ல.  

   உண்மையில் நம் நாட்டில் நிலவும் குடும்ப அமைப்பு புனிதத்துவம் உடையதே. ஒரு சமுதாயம் கட்டுக்கோப்புடன் திகழ்வதற்குக் கட்டுக் கோப்பான குடும்பமே அடிப்படையாகும். அடிப்படையில் ஆட்டம் கண்டால் சமுதாயம் உருக்குலைந்து போகும். திருமண உறவை மீறுவது என்பது மனச்சான்றுக்கு எதிரானது; கணவனும் மனைவியும் ஒருவருக்கு மற்றவர் செய்யும் நம்பிக்கைத் துரோகமும் கூட. திருமணத்திற்குப் புறம்பான உறவே கூடாது என்பது எல்லா மதங்களும் வலியுறுத்தும் ஒற்றைக் கோட்பாடாகும். இதில் அனுமதி என்ற பேச்சுக்கே இடமில்லை. நீர் நிரம்பியிருக்கும் ஆற்றின் கரைகள் தாமாக உடைந்தாலும், அல்லது கரைகளைத் தெரிந்தே உடைத்தாலும் வெள்ளப்பாழ் ஏற்படுவது உறுதி. 

    “மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும்” என்பது தொல்காப்பிய விதி. இது வழங்கும் மொழிக்கு மட்டுமன்று வாழும் வழிக்கும் பொருந்தும்.                                                       .16 comments:

 1. Excellent thought given us sir

  ReplyDelete
 2. Dr, It's unfortunate , some tmes we understand that we live in fools paradise. Better not understand, to feel frustrated.Time alone can wash away these intelligent lot to be substituted by more intelligent lot.

  ReplyDelete
 3. முடிவில் சொன்ன உதாரணம் மிகவும் அருமை...

  ReplyDelete
 4. ஆமாம் நீதியரசர் முரண்படுகிறார். கணவனின் அனுமதியுடன் ஒரு பெண் வேறு ஒருவருடன் உறவு வைத்துக் கொள்வதை நீதியரசர் இயல்பாக எடுத்துக்கொள்வதுதான் முரண்பாடு.

  ReplyDelete
 5. I agree with your view sir
  The Judge statement should be avoided which is irrelevant to our culture

  ReplyDelete
 6. Dr.C.Sylendira Babu,IPS through whatsapp
  தங்களது நிலைப்பாடு சிறப்பானது, உயர்வானது. திருமண பந்தம் நிலுவையில் உள்ளபோது இன்னொரு உறவு என்பது முறையற்றது. அது மனிதாபிமானம் இல்லாதது.

  ReplyDelete
 7. Bowya, PG Student, TNAU through Whatsapp
  Sir, everywhere some of the exceptional persons are there. It is shame for our culture. We should live in a sense that our future atleast should think about us proudly. It is really pity to hear that a judge is talking like this.

  ReplyDelete
 8. G.Indumathi, Advocate
  True, Sir. It is sad that sometimes judges decide the cases at the cost of their ideologies.

  ReplyDelete
 9. இச்செய்தியை நாளிதழ்களில் படித்தேன் ஐயா. வேதனையே.

  ReplyDelete
 10. ஐயா வணக்கம். தங்களது கருத்தில் எனக்கு உடன்பாடு....முழு உடன்பாடு...எந்த மாற்றமும் இல்லை. ஆனால் கள நிலவரம் என்ன? நேற்றைய தினம் கலைஞரின் மறைவு கொஞ்சம் இதயம் கனக்க வைத்ததால் கலைஞர் - எம்.ஜி.ஆர் உறவு, அன்றைய அரசியல் நிலை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள இணையத்துள் நுழைந்தேன். முதலில் என் கண்ணில் பட்டது மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த "இருவர்" திரைப்படம்.

  கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் தமிழகத்தை தம் கைகளுக்குள் வைத்திருந்த இரு ஆகச்சிறந்த அரசியல் ஆளுமைகளின் (அந்தரங்கம் என்ற சொல் வேண்டாம்...) இல்லற வாழ்வு பற்றிய பதிவினை இயக்குனர் கொஞ்சம் இலை மறை காயாகத்தான் படம் பிடித்திருந்தார். அதுவே என்னை நிறைய யோசிக்க வைத்தது.... கலங்க வைத்தது. "அரசன் எவ்வழி...குடிகள் அவ்வழி...!"

  இது தமிழகத்திற்கு மட்டும் இல்லை மொத்த இந்தியாவிற்கும் பொருந்தும். இன்றைய அவசரத் தேவை "தனி மனித ஒழுக்கமும் பொது வாழ்க்கை நேர்மையும் கொண்ட தலைமை". யாரையும் காயப்படுத்துவதோ அல்லது மற்றவர்களுக்கு மாற்றுக் கருத்தைப் பதிவிடுவதோ என் நோக்கம் அல்ல.பிழையிருந்தால் மன்னிக்கவும்.

  "THE QUALITY SHOULD PENETRATE FROM THE TOP"

  ReplyDelete
 11. தற்காலத் திரைப்படங்கள் இதுபோன்ற மரபு மீறல்களை ஊக்குவிக்கின்றன.

  ReplyDelete
 12. தற்காலத் திரைப்படங்கள் இதுபோன்ற மரபு மீறல்களை ஊக்குவிக்கின்றன.

  ReplyDelete
 13. தற்காலத் திரைப்படங்கள் இதுபோன்ற மரபு மீறலை ஊக்குவிக்கின்றன.

  ReplyDelete
 14. இந்த நிகழ்வை தொலைக்காட்சி செய்தியில் கேட்டேன் ஐயா மிகவும் வருத்தப்பட தக்கதாக உள்ளது.

  ReplyDelete