என் வாழ்க்கையில் கால் நூற்றாண்டு காலம் பயனுள்ள வகையில் கழிந்தது கோபி வைரவிழா மேனிலைப்பள்ளியில். முதுகலைத்
தமிழாசிரியராக, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலராக, உதவித் தலைமையாசிரியராக, தலைமையாசிரியராக
அப் பள்ளியில் பணியாற்றியபோது என் பாசவலைக்குள் சிக்கிய மாணாக்கச் செல்வங்கள் பல்லாயிரம்
பேர்கள். அவர்களுள் முப்பது நாற்பது பேர்கள் நேற்று(13.12.2025) என்னைக் கண்டு வணங்கி
வாழ்த்து பெற்றார்கள். பள்ளி நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள் எனக்கு இந்த அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது
கோபி திருக்குறள் பேரவை.
கோபி திருக்குறள் பேரவையின் 52-ஆவது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக தவத்திரு குன்றக்குடி
பெரிய அடிகளார், தவத்திரு பேரூர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் ஆகியோரின் நூற்றாண்டுவிழா
நினைவுப் பேருரையை பேரூர் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளாரும், ஈரோடு ஸ்டாலின்
குணசேகரன் அவர்களும் நிகழ்த்தினார்கள். கேட்டாரைப் பிணிக்கும் வகையிலே இருபெரும் உரைகளும்
அமைந்தன.
தொடர்ந்து சாதனையாளர்க்கு விருதுகள் வழங்கும் விழாவும், நூல்கள் வெளியீட்டு
விழாவும் சிறப்பாக நடைபெற்றது. பின்னர் பேராசிரியர் இரா.கா.மாணிக்கம் அவர்களுக்கான
நினைவு மலரை வெளியிட்டு உரையும் நிகழ்த்தினார் ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு.ச.கந்தசாமி
அவர்கள். அவரே போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிச்
சிறப்பித்தார்.
முன்னதாக , என்னைமுனைவர்பேற்றுக்குஆளாக்கிமகிழ்ந்தஎன்ஆசான்பேராசிரியர்இரா.கா. மாணிக்கனார்குறித்துஓர்உரையாற்றுவதற்கும்வாய்ப்புக்கிடைத்ததைப்பெரும்பேறாகஎண்ணிமகிழ்கிறேன்.
நான்கோபியில்பணீயாற்றியகாலத்தில்கோபிதிருக்குறள்பேரவையில்இணைந்துசெயல்பட்டதைக்கருத்தில்கொண்டு,
இந்த விழாவில் அடியேனுக்குத் ‘திருவள்ளுவர்விருது’வழங்கியபோதுஅதைநன்றியுடன்பெற்றுக்கொண்டேன். இதேவிழாவில்இந்தஎளியவன்எழுதியதிருக்குறள்உரைவெண்பாநூல்வெளியானநிகழ்வும்என்வாழ்வில்என்றும்நினைக்கத்தக்கநிகழ்வாகும். இவற்றுக்குஏற்பாடுசெய்தவர்கள்என்னிடம்படித்தமாணவர்களே. அவர்களுக்கெல்லாம்
எப்படி நன்றி சொல்வேன்!
இந்த விழாவின் வெற்றிக்குப் பாடுபட்டவர்கள் பலராக இருந்தாலும் இருவர் குறிப்பிடத்
தகுந்தவர்கள். ஒருவர் பேராசிரியர் அரங்கசாமி அவர்களின் இளையமகன் அர.அருளரசு. மற்றவர்
திருக்குறள் பேரவையின் தலைவர் பேராசிரியர் நீ.வ.கருப்புசாமி. கடந்த இரு மாதங்களில்
இவர்கள் நன்கு திட்டமிட்டுச் செயல்பட்ட பாங்கினை நான் அறிவேன்.
விழா முடிந்ததும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் அனைவரிடமும் விடைபெற்றோம்
நானும் என் துணவியாரும்.
எங்கள் வீட்டுத்
தோட்டத்தில் நன்கு உயரமாக வளர்ந்த மொந்தன் வாழைமரம் ஒன்று தெருப்பக்கம் சாய்ந்து நின்றது. அதிலிருந்து தொங்கிய பசுமையான கிழிந்த இலையுடன்
கூடிய மட்டைகளைத் தெருவில் திரியும் மாடு கடிப்பதுண்டு.
துணைவியார்
அதைப் பார்க்கும் போதெல்லாம் மரத்தை நிமிர்த்தி ஒரு முட்டுக் கொடுக்கச்சொல்லி என்னை
வற்புறுத்துவார்.
ஆனால் நான் ‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்று சொல்லிக் காலம் கடத்தினேன்.
அறுபத்தாறு ஆண்டுகளுக்குமுன் - 1959ஆம் ஆண்டு - என் பெற்றோர் ஏழு வயது சிறுவனான என்னை, அன்றைய திருச்சி மாவட்டம்
இன்றைய அரியலூர் மாவட்டம் கூவத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், முதலாம் வகுப்பில்
சேர்த்தபோது என் வலக்கை ஆட்காட்டி விரலைப்பிடித்து, தட்டில் பரப்பியிருந்த பச்சரிசிமேல்
ஆனா ஆவன்னா எழுதச் செய்தவர் இராஜாத்தி டீச்சர். அப்போது அவருக்கு பதினெட்டு அல்லது
பத்தொன்பது வயது இருக்கலாம். நான் நான்காம் வகுப்புக்குச் செல்லும் வரையில் எனக்கு
ஆசிரியராக இருந்தார்.
மரபு சார்ந்த கவிதை குறித்த யாப்பியல் செய்திகள்
கணக்கில் அடங்கா. அண்மையில் ஒரு புதிய யாப்பு வகை குறித்து யாப்பருங்கலக்காரிகை என்னும்
இலக்கண நூலில் வரும் ஒரு சிறு குறிப்பைப் பார்த்தேன். பின்னர் பிற யாப்பியல் நூல்களையும்
படித்து, இந்தப் பாவகை பற்றிய செய்திகளைத் தொகுத்தேன். அவை பின்வருமாறு:
இப் பாவகைக்கு வெளிவிருத்தம் என்று பெயர்.
சிந்தியல் அல்லது அளவியல் பாவாக மட்டும்
அமையும். அதாவது மூன்று அல்லது நான்கு அடிகளை மட்டும் கொண்டிருக்கும். ஒவ்வோர் அடியிலும்
நான்கு சீர்கள் அமையும்; அவற்றைத் தொடர்ந்து ஈரசை அல்லது மூவசை கொண்ட தனிச்சொல் அமையும்.
அதிலும் ஓர் இன்றியமையாத குறிப்பு உண்டு. முதல் அடியில் அமையும் தனிச்சொல்லே அடுத்தடுத்த
அடிகளிலும் அமையும். அடி தோறும் ஓரெதுகை அமையும்.
முதல் அடியில் அமையும் வாய்பாட்டில் மற்ற அடிகளும் அமைந்தால் ஓசைநயம் சிறப்பாக இருக்கும்.
இது வெண்பாவுக்குரிய பாவினம் என்பதால். வெண்டளைகளால்
அமைதல் சிறப்புடைத்து. எனினும் பிற தளைகள் விரவி வரலாம் என்கிறார் இலந்தை சு.இராமசாமி, மருதூர் அரங்கராசன் ஆகியோர்.
இக் கருத்தில் பாவலர் ப.எழில்வாணன் அவர்களுக்கும் உடன்பாடு உண்டு.
மேற்காண் விதிகளுக்கு உட்பட்டு விநாயகர்
சதுர்த்தியன்று சில வெளிவிருத்தங்களை எழுதினேன். சிறப்பாக உள்ளதா என்பதை வாசகர்கள்
சொல்ல வேண்டும்.
கனடாவில் என் மகளுடன் இருக்கும் காலத்தில் அவ்வப்போது நூலகத்திற்குச் செல்வதுண்டு.
இம்மை உலகத்திலிருந்து மறுமை உலகத்திற்குச் சென்ற மனமகிழ்ச்சியில் அரைநாள் பொழுதை அங்கே
கழிப்பதுண்டு.
காதில் வந்து விழுந்த செய்தியை
நம்பவும் முடியவில்லை. நம்பாமலும்
இருக்க முடியவில்லை.
சுவாசிக்கும் மூச்சுக்காற்று
கெட்டு விட்டதால் மூச்சு முட்டுகிறதாம். அதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாள்கள்
விடுமுறையாம்.காற்றில் கலந்த தூசு மற்றும் உலோகத் துகள்களைப் போக்க
ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் தெளிக்க முதலமைச்சர் ஏற்பாடு செய்துள்ளாராம். இந்தக்
கூத்தெல்லாம் எங்கே நடந்தது என்றுதானே கேட்கிறீர்கள்? வேறு எங்கே? நம் நாட்டின் தலைநகரான புது
தில்லியில்தான்!
செப்பலோசை
அமையாமல் பலரும் வெண்பா எழுதுவதைக் கண்டு மனம் நொந்து ஒரு வெண்பா எழுதினார் மதிப்பிற்குரிய
பெரியவர் ஈழம் தமிழப்பனார். அவர் எழுதிய வெண்பா இது:
செப்-பலோ-சை வாராமல்செந்தமிழில் வெண்பாக்கள்/
எப்பவுமே கூறும்இயல்பினரைத்–தப்பாமல்/
வெல்லம்போல்அள்ளுசுவை வெண்பாஇலக்கண
எல்லையை மீறின் எதிர்.
உங்கள் வெண்பாவில் ‘செப்பலோசை’ என்னும் விளாங்காய்ச் சீர் செப்பலோசையைக்
கெடுத்துவிடுமே ஐயாஎன்று ஒரு பதிவிட்டேன். அதற்கு
மறு(ப்பு) மொழியாக விளாங்காய்ச் சீர் வெண்பாவில் வரலாம் எனக் கூறியதோடு நில்லாமல்,
விளாங்காய்ச் சீர் வருவதைத் தவிர்க்கலாம் என்போரின் கூற்று ஏற்கத்தக்கது அன்று என்பதைத்
தெளிவாகவும் உறுதியாகவும் கூறினார். (கேட்க
அதைத் தொடர்ந்து, விளங்காய்ச் சீருக்கான விளக்கத்தைத் தேடினேன்.
வெண்பாவுக்குரிய செப்பலோசையைக் கெடுக்கும் என்பதால் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்,
சைவத் திருமுறைகள்முதலான மரபிலக்கியங்களில் விளாங்காய்ச் சீர் பயன்படுத்தப்படவில்லை
என்பதைச் சான்றுகளுடன் நிறுவுகிறார் தமிழறிஞரும் நாசா விஞ்ஞானியுமான முனைவர் நா.கணேசன்
அவர்கள். (பார்க்க: https://nganesan.blogspot.com/2018/07/venpavil-vilaangaayc-ciir-vilakku.html)
பாரதியாரும் கண்ணதாசனும் கூட விளாங்காய்ச்சீரைத்
தொடவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.
திருக்குறளில் பல இடங்களில் இந்த விளங்காய்ச்
சீர் இடம் பெற்றுள்ளதாய்ச் சிலர் சுட்டிக்காட்டுவதை அவர் தகுந்த சான்றுகளுடன் மறுக்கின்றார்.
அதற்கு ஆதாரமாகப் பணிநிறைவு பெற்ற
பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர்பேராசிரியர் இராம.சுப்பிரமணியம்
எழுதியுள்ள ‘கணக்கு வழக்கு இலக்கிய இலக்கணம்’ என்னும் நூலிலிருந்து உரிய சான்றுகளை
ஒன்றன்பின் ஒன்றாக அடுக்குகின்றார்.
அளபெடை, விகாரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம்
போன்ற இலக்கண நுட்பங்களை அறியாதவர்களே வள்ளுவர் விளாங்காய்ச்சீர்களைக் கையாண்டுள்ளதாகப் பிறழ உணர்கின்றனர் எனப் பேராசிரியர்
இராம.சுப்பிரமணியம் தம் நூலில் நிறுவுகிறார் என்பதை முனைவர் நா.கணேசன் அவர்கள் நிரல்பட
விளக்கிக் கூறுகின்றார். செப்பலோசையைக் கெடுக்கும் விளாங்காய்ச் சீரை வள்ளுவர் தம்
நூலில் ஓர் இடத்தில் கூட கையாளவில்லை என்பதை முதன்முதலில் எடுத்துக் கூறியதால், பேராசிரியர்
இராம.சுப்பிரமணியம் அவர்களுக்கு,
விளாங்காய்ச்சீர் பாவில் விளங்காச்சீ ரென்று
விளக்கிய
வித்தகரைப் போற்று
என ஒரு குறள்வெண்பாவை இயற்றி அவருக்குப் புகழ்மாலையாகச் சூட்டுகிறார்.
மேலும் குமரகுருதாச பாம்பன் சுவாமிகளின்
விதப்ப விதியை ஆதாரமாக மதுரன் தமிழவேள் என்பார் சுட்டிக் காட்டுவதை முன் வைக்கின்றார்.
பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் “ திருவலங்கற்றிரட்டு” என்னும் நூலில் உள்ள விதப்ப
விதியின் உரையாவது: “
வெண்பாவுக்குரிய
காய்ச்சீர் நான்கனுள் இடையில் குறில்நெடில் இணைந்த நிரையசை உடையனவும், இரண்டு மாஞ்சீராகப் பிரிக்கத் தகுவனுமான ‘தம்பிரானே’ என்பது போன்ற கூவிளங்காயும் , ‘சருவசாரம்’
என்பது போன்ற
கருவிளங்காயும் வெண்பாவில் வரவொண்ணா எனவும், வரின் ஓசைநயங் கெடும் எனவும் அறிக.
கலிப்பாவில் வரும் காய்ச்சீர்கட்கும் இந்நியாயங் கொள்க.” (பார்க்க: https://madhuramoli.com)
நம் காலத்துத் தமிழறிஞர்களின் தமிழறிஞர்களின்
கருத்துகளையும் தொகுத்துத் தருகிறார்.
வெண்பாவில்
‘வீடுபேற்றை’, ‘கேட்கமாட்டேன்’ என்பன போன்ற விளாங்காய்ச்
சீர் வரலாமா? என்ற கேள்விக்குவெண்பாவில் என்னஎவ்வகைப் பாவிலும் விளாங்காய்ச் சீர் வருவது விரும்பத்
தக்கதன்று. அது எந்தப் பாவில் அமைந்தாலும் அப்பாவுக்குரிய
ஓசையைக் கெடுத்துவிடும்என்று விடையிறுக்கின்றார் ’இலக்கணச் சுடர்’ இரா. திருமுருகன்.
கி.வா.ஜ. வின் கவி
பாடலாம் வாங்க புத்தகத்தின் கேள்வி பதில் பகுதியில் பக்கம் 228 கேள்வி 15:
பதில்: ’முதலடியில் இரண்டாம் சீரில் இடையில்
விளாஞ்சீர் வந்தமையால் ஓசை நீள்கிறது. குகே என்று குறில் நெடிலாகிய நிரை வந்தது.
அப்படி வருவது தவறு’
சாமிநாதன்
என்னும் இறைவன் பெயரை ஒரு சீராய் வைத்தால் ஓசை கெடும் எனக்
கருதிய வள்ளலார் அதைத் தவிர்க்க வேண்டி வகையுளியாய் அமைத்துள்ளதைச் சான்றாகத்
தருகிறார்.
‘விளாங்காய்ச்சீர் வருவதாகச் சொல்லப்படும் ஒன்றிரண்டு வெண்பாவும், ஆய்ந்து பார்த்தால் ஏட்டில் இருந்து
அச்சுக்குப் போந்தபோது ஏற்பட்ட கவனப் பிசகான பிழைகள் என்பது என் புரிதல்” என்று சந்தவசந்தத்தில் கூறியுள்ளதாக ஒரு கட்டுரையில்
எழுதுகிறார் முனைவர் நா.கணேசன்.
சந்த வசந்தம்
குழுமத்தைத் சேர்ந்த பெரும்புலவர்கள் இலந்தை சு.இராமசாமி, முனைவர் சு.பசுபதி,
திருச்சி புலவர் இரா.இராமமூர்த்தி, கவிஞர் குருநாதன் இரமணி, திரு.இராமகிருஷ்ணன், திரு,ஹரிகிருஷ்ணன்
போன்றோரும் விளாங்காய்ச்சீர் வெண்பாவில் இடம்பெறலாகாது என்று உறுதியாகக் கூறுவதை
யானே அறிவேன்.
அதே சமயம் பாவலர் மா.வரதராசன், கனடா சி.ஜெயபாரதன்,
ஈழம் தமிழப்பனார் ஆகியோர் விளாங்காய்ச்சீரை ஒதுக்கத் தேவையில்லை என்கின்றனர்.
வள்ளுவரே இச் சீரைத்
தவிர்க்கும்போது அதை நாம் வெண்பாவில் பயன்படுத்தி, வள்ளுவரைவிட நுண்மாண் நுழைபுலம்
மிக்கவராய்க் காட்டிக் கொள்வதை என் சிறுமதி ஏற்கமறுக்கிறது.
எது எப்படியோ, விளாங்காய்ச் சீர் குறித்து இந்தப்
பதிவை இடுவதற்கு வழிவகுத்த முனைவர் ஈழம் தமிழப்பனார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி
உரித்தாகுக.
ஓர் உணவகத்தில் கரப்பான் பூச்சி ஒன்று எங்கிருந்தோ
பறந்து வந்து ஒரு பெண்ணின் தோள் மீது அமர்ந்து கொண்டது. உடனே அந்தப் பெண் பயத்தில் கூச்சலிட
ஆரம்பித்தார். அந்தக் கரப்பான் பூச்சியை அவர்
மீதிருந்து விலக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். அதுவரை அமைதியாக இருந்த அவருடன் வந்தவர்களுக்கும்
இப்பொழுது அந்தப் பதற்றம் தொற்றிக் கொண்டது.
‘கரூர் சதி
வழக்கு’ என்பது இன்றுவரை பலருக்கும் புரியாத ஒரு புதிராகவே இருந்தது. இப்போது
கரூரில் வாழும் மிக மூத்த குடிமக்களுக்கும் இது குறித்து ஒன்றும் தெரியவில்லை.
ட்ரேகன் என்னும் தமிழ்ப்படம் வெளியான முதல் நாளிலேயே
(2025 பிப்ரவரி 21) அதைப் பார்த்து விடுவது என்ற முடிவோடு அமெரிக்காவில், டெக்சாஸ்
மாநிலம், டெல்லாஸ் மாநகரில் சினிபாலிஸ் என்னும் திரையரங்கினுள் நுழைந்தோம்.
Ho’opponopono.இது என்ன
வாயினுள் நுழையாத சொல்? இது ஒருவர் தன்னைத் தானே செதுக்கிக் கொள்வதற்கான ஒற்றை மந்திரச்
சொல். இந்த மந்திரச் சொல் குறித்து விரிவாகப் பேசும் புகழ்பெற்ற
நூல்Zero Limits. இதன் நூலாசிரியர்
Joe Vitale and Hew Len. இந்த நூல்
தமிழிலும் வெளியாகியுள்ளது.
கும்பகோணம் கல்லூரியில் படிக்கும் இருபது
வயது மாணவி தவறான வழியில் உறவு வைத்துக் கருவைச் சுமந்தாள். அவள் கழிவறைக்குள்
சென்று தானே பிரசவம் பார்த்து, பிறந்த குழந்தையை அங்கிருந்த குப்பைத் தொட்டியில் வீசிவிட்டாள். மயங்கி
விழுந்த அப் பெண்ணை, விடுதிக் காப்பாளர் மருத்துவமனையில் சேர்த்தார், தாயும்
சேயும் நலம் என நம்மூர் நாளேடு செய்தி வெளியிட்டு நாலு காசு பார்த்தது.
ஈரோட்டில் ‘முனை’
என்னும் தன்னார்வத் தொண்டு அமைப்பு பாராட்டுக்குரிய வகையில் செயல்படுகின்றது. இதில்
கல்லூரியில் படிக்கின்ற, படித்து முடித்த இளைஞர்களும் இளம்பெண்களும் இடம் பெற்றுள்ளனர்.
பரம்பொருளான
இறைவன் உண்டு எனவும் இல்லை எனவும் மக்கள் பலவாறு பேசுவது போல, சீதைக்கு
இடை உண்டு எனவும் இல்லை எனவும் தோழியர்
பலவாறு பேசி, இறுதியில்
இடை உண்டு எனக் கண்டு, அந்த இடைக்கு ஒட்டியாணம் போன்ற அழகிய அணிகலன்களைத் தோழியர்
அணிவிக்க, அவற்றின்
எடையைத் தாங்காமல் இடைவருந்தியது என்பது கம்பனின் கற்பனை!
இதனால் சகலருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், ஒரு
கவிநயத்திற்காகப் பெண்களுக்கு இடை இல்லை எனச் சொல்லலாமே தவிர, உண்மையில் இடை இல்லாமல் பெண்கள் இயங்க முடியாது. அதுபோல, ஒரு பேச்சுக்காகக் கடவுள் இல்லை எனச் சொல்லலாமே தவிர, உண்மையில் கடவுள் இல்லாமல் இந்த உலகம் இயங்காது.