முனைவர் செ.சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்
அவர்கள் எழுதி, கோவை விஜயா பதிப்பகம் அண்மையில் வெளியிட்டுள்ள நம்மாலும் முடியும்
என்னும் நூல் தமிழ் கூறும் நல் உலகிற்கு ஒரு புது வரவாகும்.
போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து
என்றொரு புரியாத பழமொழியை அவ்வப்போது சொல்லி நம் முயற்சிக்கு முட்டுக்கட்டைப்
போடும் சிலரைச் சந்திக்கிறோம். அவ்வளவு ஏன்? நாமும் இந்தப் பழமொழியைச் சொல்லி நம்
குழந்தைகளின் முயற்சியைக் கூட முடமாக்கி விடுகிறோம்.